வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-மிகவும் எளிமையாக நடந்த விழாவில், ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் குர்பிரீத் கவுரை திருமணம் செய்தார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
பஞ்சாபில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று முதல்வரானார் ஆம் ஆத்மியைச் சேர்ந்த பகவந்த் மான், 48. மேடை மற்றும் ‘டிவி’ காமெடி நடிகரான இவர், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார்.ஏற்கனவே திருமணமான இவர், தன் மனைவி இந்தர்ஜீத் கவுரை, 2015ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, சீரத் கவுர், 21 என்ற மகளும், தில்ஷன், 17 என்ற மகனும் உள்ளனர்.
தன் தாய் மற்றும் சகோதரியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மீண்டும் திருமணம் செய்ய பகவந்த் மான் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஹரியானா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்த டாக்டர், குர்பிரீத் சிங், 30, உடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.இவர்களுடைய திருமணம், சண்டிகரில் உள்ள முதல்வரின் வீட்டில் நேற்று மிகவும் எளிமையாக நடந்தது.
திருமணத்திற்கு, குறிப்பிட்ட சில உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். கட்சியின் எம்.பி.,யும், நண்பருமான ராகவ் சத்தா உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.திருமண ஜோடிக்கு, பல்வேறு கட்சியைச் சேர்ந்தோர், சமூக வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் முதல்வர் பதவியில் உள்ள ஒருவர் திருமணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement