டிவிட்டர் டீல் கோவிந்தா.. ஆட்டம் கண்ட எலான் மஸ்க்..!

சமுக வலைத்தளத்தில் பெரும் புரட்சியை எலான் மஸ்க் ஏற்படுத்துவார் எனப் பல கோடி மக்கள் எதிர்பார்த்து இருந்த வேளையில் தற்போது எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது எலான் மஸ்க் வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத பெரும் தோல்வியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன தான் நடந்தது..?

ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!

ஏற்கனவே எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கக் கூடாது எனப் பில் கேட்ஸ் மற்றும் இதர பெரும் தலைகள் முதலீடு செய்துள்ள NGO-க்கள் பெட்டிஷனில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் கணக்கிட்ட படியே நடந்து வருகிறது..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டிவிட்டரை கைப்பற்ற போதுமான பணத்தை எலான் மஸ்க் திரட்டியுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அதில் பெரும் பகுதி பணம் டெஸ்லா பங்குகளை அடகு வைப்பது வாயிலாக இருந்தது. அதுக்கும் இதுக்கும் என்ன பிரச்சனை என்று தானே கேட்குறீங்க பெரிய கதையே இருக்கு.

டிவிட்டர்

டிவிட்டர்

டெஸ்லா பங்குகள் 2022ல் மட்டும் சுமார் 38.85 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதனால் டிவிட்டரை கைப்பற்றும் அளவிற்கான பங்குகள் எலான் மஸ்கிடம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் போதுமான பணத்தைத் திரட்ட முடியாத நிலையில் டிவிட்டர்-ஐ எலான் மஸ் கைப்பற்றும் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

போலி கணக்குகள் விவகாரம்
 

போலி கணக்குகள் விவகாரம்

ஆனால் எலான் மஸ்க் இதைக் கூறாமல் தொடர்ந்து டிவிட்டர் தனது சமூகவலைத்தளத்தில் இருக்கும் போலிக் கணக்குகள் குறித்த தரவுகளைக் கேட்டு உள்ளார், அதை டிவிட்டர் நிர்வாகம் கொடுக்க மறுக்கிறது, அதேவேளையில் ஒவ்வொரு மாதமும் டிவிட்டர் பல லட்சம் போலி கணக்குகள் பாட்-கள் ஆகியவற்றை நீக்கி வருகிறது.

எலான் மஸ்க் டீம்

எலான் மஸ்க் டீம்

எலான் மஸ்க்-ன் டீம் டிவிட்டரில் இந்தப் போலி கணக்குகளைக் கணக்கிட முடியாத காரணத்தால் அடுத்தடுத்து நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் டிவிட்டர் டீல் தோல்வி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

 வாய்ப்புகள் குறைவு

வாய்ப்புகள் குறைவு

ஆனால் டிவிட்டர் மதிப்பை குறைத்தாலோ, அல்லது பணத்திற்குப் பதிலாகப் பங்கு பரிமாற்றமாகவோ அல்லது டெஸ்லா முதலீட்டாளர்களை எலான் மஸ்க் பேசி சமாளித்து டெஸ்லா டிவிட்டரை வாங்கினாலோ கட்டாயம் நடக்கும். ஆனால் இதில் எந்த ஆப்ஷனுக்கும் வழி இல்லாமல் தான் தற்போது எலான் மஸ்க் நிற்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk – Twitter acquisition deal may fail miserably; Finance to fake accounts many problem

Elon Musk – Twitter acquisition deal may fail miserably; Finance to fake accounts many problem டீவிட்டர் டீல் கோவிந்தா.. ஆட்டம் கண்ட எலான் மஸ்க்.. செம பயமாம்..!!

Story first published: Friday, July 8, 2022, 18:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.