புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் நிலை பற்றியும், அதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. காணொளி மூலம் நடந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மாண்டவியா பேசும்போது, ‘ஒவ்வொருவரும் கொசு ஒழிப்பு பணியை தங்களது வீடுகள், அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தொடங்க வேண்டும்’’ என்றார். மேலும், மருந்துகள் வினியோகத்துக்கு ஆஷா சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தி கொள்வது போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.