சென்னை: தொழுப்பேடு பேருந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப்ப பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம், தொழுபேடு கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி, அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் ,தொழுபேடு கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) July 8, 2022