ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் சியான் என அழைக்கப்படும் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார். பல கெட்டப்கள் போட்டு, தீவிர உழைப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்துள்ள நடிகர் விக்ரமிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைக்கு நாம் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயன்றோம்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மருத்துவமனை தரப்பில் விரைவில் விவரங்கள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை விக்ரம் உட்பட பல உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக இருந்த நிலையில், விக்ரமின் உடல்நிலை பற்றிய இந்தத் தகவல், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான அவரது கதாப்பாத்திரம் தொடர்பான போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.