அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. தலைமையை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட உள்ளார்
எப்படியாவது அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இதுவரை நடைபெற்ற வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக வழக்குகள் முடித்துள்ளது.
இதனிடையே தமிழக முழுவதும் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி பகுதியில் மக்களை சந்திக்கும் பணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து நேற்று திண்டிவனம் பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்டதிட்டம் படி நான் அதிமுகவின் பொது செயலாளர் இருந்து வருகிறேன். அதிமுகவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவான மனநிலையோடு இருக்கிறார்கள். விரைவில் அதிமுக ஆட்சி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.