நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு


நாளைய தினம் எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதன் காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எரிபொருள் பாவனை அதிகரிப்பு

நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு | Bus Strike

அத்துடன், பொலிஸார் வீதியை மூடியதன் விளைவாக மாற்று வழிகளைப் பயன்படுத்தும் போது எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளது.

நாளைய தினம் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால் மக்கள் போராட்டத்திற்கு எமது தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேருந்து நடத்துனர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருளை மாத்திரமே பெறுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம்

நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு | Bus Strike

சேவைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருளை பெற்றுத் தரவில்லை என்றால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்காக எரிபொருள் வழங்கும் முறைமையொன்றை இன்று காலை அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று மதியம் 12 மணி முதல் சேவையில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கொழும்பை முற்றுகையிட்டு போராட்டம்

இதேவேளை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்றுகையிடப்படவுள்ள கொழும்பு! நாட்டை முடக்குவது தொடர்பில் வெளியான தகவல் 

கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.