நைசா நழுவும் சோமேட்டோ.. எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல பாஸ்..!

ஆன்லைனில் வாங்கும் உணவிற்கும் நேரில் கடையில் சென்று வாங்கும் உணவிற்கும் மிகப்பெரிய அளவில் விலை வித்தியாசம் இருக்கிறது என ராகுல் என்பவர் லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலானது மட்டும் அல்லாமல் பலருக்கும் விலை வித்தியாசம் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.

இந்த மக்கள் மத்தியில் வேறு விதமாக மாறுவதற்குள் அப்பதிவின் தாக்கத்தை உணர்ந்து சோமேட்டோ பதிவிற்குக் கீழ் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விளக்கம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்.

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சோமேட்டோ..!

ராகுல் பதிவு

ராகுல் பதிவு

ராகுல் என்பவர் லிங்கிடுஇன் தளத்தில் ஆன்லைன் ஆப்லைன் உணவு ஆர்டரில் இருக்கும் விலை வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும் என்பதற்காகவே ஓரே உணவகத்தில் ஓரே உணவை ஆன்லைனிலும் ஆர்டர் செய்தது போலவே நேரில் சென்றும் வாங்கியுள்ளார். இதில் இருக்கும் விலை வித்தியாசத்தைப் பில் உடன் விளக்கமாக லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டார்.

ஆப்லைன் ஆர்டர் விலை

ஆப்லைன் ஆர்டர் விலை

இவருடைய ஆர்டரில் வெஜிடபிள் பிளாக் பெப்பர் சாஸ், வெஜிடபிள் ப்ரைட் ரைஸ், மஷ்ரூம் மோமோ ஆகிய 3 உணவுகள் இருந்தது. இந்த உணவை ஆப்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய போது இதன் விலை 512 ரூபாய், இதில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி அடக்கம்.

சோமேட்டோஆன்லைன் ஆர்டர் விலை
 

சோமேட்டோஆன்லைன் ஆர்டர் விலை

இதேபோல் சோமேட்டோ ஆப் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது 689.90 ரூபாய் இதில் 75 ரூபாய் கூப்பன் சேர்த்தது மூலம் தள்ளுபடி பெற்றுள்ளார் ராகுல். ஆன்லைன் ஆப்லைன் ஆர்டருக்கும் சுமார் 178 ரூபாய் அதிகமாக பணத்தை வசூலித்துள்ளது, அதாவது கடையில் வாங்கும் உணவைக் காட்டிலும் சுமார் 34.76 சதவீதம் அதிகமாகும்.

ஸ்விக்கி விலை வித்தியாசம்

ஸ்விக்கி விலை வித்தியாசம்

இந்தப் பதிவிற்குக் கீழ் நிகேஷ் ஜெயின் என்பவர் ஒரு தாலி மீல்ஸ் வாங்க ஸ்விக்கி செயலியை திறந்த போது 120 ரூபாய் மற்றும் டெலிவரி சார்ஜ் எனச் சேர்த்து மொத்தம் 140 ரூபாயாக இருந்தது. இதே தாலி மீல்ஸ் கடையில் சென்று சாப்பிட்ட போது 99 ரூபாய் மட்டுமே. அப்படியானால் ஸ்விக்கி சுமார் 40 சதவீதம் கூடுதலான தொகையை வசூலிக்கிறது.

சோமேட்டோ விளக்கம்

சோமேட்டோ விளக்கம்

ஹாய் ராகுல், ஒரு வாடிக்கையாளருக்கும் உணவகத்திற்கும் இடையே ஒரு இடைத்தரகர் தளமாக மட்டுமே Zomato இருக்கும் , எங்கள் தளத்தில் இருக்கும் உணவகங்களின் உணவின் விலைகளில் எந்தக் கட்டுப்பாட்டையும் சோமேட்டோ கொண்டிருக்கவில்லை. உங்கள் கருத்தை நாங்கள் உரிய உணவகத்திற்குத் தெரிவித்துள்ளோம் என விளக்கம் கொடுத்துள்ளது.

டிரென்டிங்

டிரென்டிங்

லிங்கிடுஇன் தளத்தில் ராகுல் போட்ட பதிவிற்குச் சுமார் 11,000 பேர் ரியாக்ட் செய்தது மட்டும் அல்லாமல் 1900 பேர் கமெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் விளக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன..?

 

 

சேட்டைத்தனத்தின் உச்சம்.. ஸ்விக்கி ஊழியர் செய்த காரியத்தை பாத்தீங்களா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Zomato clarifies Online vs Offline Food Price difference Debate

Zomato clarifies Online vs Offline Food Price difference Debate நைசா நழுவும் சேமேட்டோ.. எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல பாஸ்..!

Story first published: Friday, July 8, 2022, 20:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.