டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கினர். ட்விட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக் கூடாது; உத்திரப்பிரதேசத்தின் சீதாப்பூர் நீதிமன்ற எல்லைப் பகுதியை விட்டு ஜுபைர் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் தந்தது.