காலி – தெவட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற பஸ் சாரதி ஒருவரை ,தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், கடற்படை அதிகாரி ஒருவரை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று(07) உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான விடயம் காலி நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 3 ஆம் திகதி காலி – கலஹே பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட சாரதி, காலி, துறைமுக பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.