கடலூர் தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்எல்ஏ அய்யப்பனுக்கும் திமுக வேளாண்மை துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நகராட்சி தலைவர் உள்ளிட சில பதவிகளை திமுகவினர் கைப்பற்றினர். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இடம் திருமாவளவன் புகார் அளித்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய மக் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆனால், அய்யப்பன் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யவில்லை. கடலூர் மாநகராட்சி மேயராக தன் ஆதரவாளர்களை கொண்டு வருவதற்காக கவுன்சிலர்களை கடத்தி தன் கட்டுப்பாட்டில் அய்யப்பன் வைத்திருந்தார். அவரது முயற்சிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் முறியடித்து, தன் ஆதரவாளர்களை மேயராக தேர்வு செய்ய வைத்தார்.
இந்த புகார் முதலமைச்சர் முக ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அய்யப்பனை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து திமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அழைத்து அய்யப்பன் ஆலோசனை நடத்தினர். அப்போது, பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தால் எம்எல்ஏ பதிவை இழந்திட நேரிடும் என்பதால் பாஜக அனுதாபியாக இருந்துவிட்டு சட்டப்பேரவையில் அதிருப்தி திமுக எம்எல்ஏவாக செயல்படலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.