பீஹாரில் ஹிந்து மத பெரியவருக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாட்னா-பீஹாரைச் சேர்ந்த இஸ்லாமியரின் கடையில், 25 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழந்த ஹிந்து பெரிய வரின் இறுதி சடங்கை, முஸ்லிம் குடும்பத்தினர் ஹிந்து முறைப்படி நடத்தி வைத்தனர்.

latest tamil news

பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் பாட்னாவில், முகமது ரிஸ்வான் கான் என்பவர் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன் இவரது கடைக்கு வந்த ராம்தேவ் என்ற நபர், அங்கு வேலையில் சேர்ந்து உள்ளார்.

அவருக்கு கடையின் கணக்குகளை பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டது. ராம்தேவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ரிஸ்வான் குடும்பத்தினர் கருதினர். வயோதிகம் காரணமாக ராம்தேவால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவரை வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்திய ரிஸ்வான், மாதம் தோறும் சம்பளத்தை மட்டும் அளித்து வந்தார்.

latest tamil news

இந்நிலையில், ராம்தேவ் உடல்நலக்குறைவு காரணமாக, தன், 75வது வயதில் சமீபத்தில் காலமானார். அவரது இறுதி சடங்கை, முகமது ரிஸ்வான் கானின் குடும்பத்தினர் ஹிந்து முறைப்படி செய்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு மிக சிறந்த உதாரணமாக திகழ்வதாக பலரும் உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.