புரோட்டா மாஸ்டர் சம்பளம் கூட ஒயிட்காலர் ஊழியர்களுக்கு இல்லை: 65% இந்தியர்களின் சம்பளம் இவ்வளவுதானா?

ஒரு சின்ன ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர் பணி செய்யும் ஊழியர் கூட தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

ஆனால் அலுவலகம் சென்று ஒயிட் காலர் பணியில் இருக்கும் ஊழியர்கள் அதைவிட பாதிதான் பலர் சம்பாதிக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

65 சதவீத இந்தியர்களின் சராசரி சம்பளம் வெறும் ரூபாய் 15,000 மட்டுமே என்ற தகவல் ஆய்வறிக்கையில் கிடைக்கப்பெற்றுள்ளது.

கருக்கலைப்பு கிளினிக் செல்பவர்களுக்கு பாதுகாப்பு: லொகேஷன் ஹிஸ்ட்ரியை நீக்கும் கூகுள்!

இந்தியர்களின் சம்பளம்

இந்தியர்களின் சம்பளம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு ஒயிட் காலர் ஜாப் என்று கூறப்படும் அலுவலக பணியாளர்கள் மாதம் 15,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக சம்பளம் வாங்குவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சம்பளம் மேலாண்மை செயலியான Salary box என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் 65% இந்தியர்கள் சராசரியாக ரூ.15000 மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆண்கள், பெண்கள் சம்பளம்

ஆண்கள், பெண்கள் சம்பளம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 12,398 சம்பாதிக்கின்றனர் என்றும் ஆண்கள் சராசரியாக 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை தொழிலாளர்களில் 27 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர் என்றும் 73% ஆண்கள்தான் ஊழியர்களாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி சம்பளம்
 

சராசரி சம்பளம்

இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே மாதம் ஒன்றுக்கு ரூ.20,000-40,000 (சராசரியாக ரூ. 25,000) வருமானம் ஈட்டுகிறார்கள் என்றும், பெரும்பான்மையான இந்தியர்கள் வாழத் தகுந்த இடத்தை பாதுகாப்பதில் கூட சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச சம்பளம்

குறைந்தபட்ச சம்பளம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மத்திய ஊதியக் குழு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளத்தை மட்டுமே தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன என்றும் அதாவது மாதம் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே நாடு முழுவதிலுமுள்ள 850 மாவட்டங்களில் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்கள் சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.9000 மட்டுமே சம்பளம்

ரூ.9000 மட்டுமே சம்பளம்

பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் 8000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது என்பதும் ஆய்வறிக்கையில் உள்ள அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

ஐடி நிறுவனம்

ஐடி நிறுவனம்

போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தையல் நிறுவனங்கள் ஆகியவை தான் ஊழியர்களுக்கு ஓரளவு அதிக ஊதியம் வழங்கி வருகிறது என்றும் ஐடி நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைத்து வருவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை ஊழியர்கள்

ஆரம்பநிலை ஊழியர்கள்

ஆரம்பகட்டத்தில் வேலைவாய்ப்பில் நுழையும் இளைஞர்களின் மாத சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் இந்தியாவில் பெரும்பான்மையான ஆரம்பநிலை ஊழியர்கள் மிகக்குறைந்த சம்பளம் பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப சூழல்

குடும்ப சூழல்

பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் தான் இருக்கிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த தொழில்

சொந்த தொழில்

புரோட்டா கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், நடைபாதையில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சம்பாதிப்பதை விட பாதி வருமானம்தான் ஒயிட் கலர் ஜாப் என்று கூறிக்கொள்ளும் அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்களின் வருமானம் உள்ளது என்றும், எவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சின்ன தொழிலாக இருந்தாலும் சொந்த தொழிலுக்கு ஈடு இணை இல்லை என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொழிலதிபர்களாகும் இளைஞர்கள்

தொழிலதிபர்களாகும் இளைஞர்கள்

அதனால் தான் தற்போது உள்ள இளைஞர்களுக்கு நிறுவனங்களில் மாத சம்பளமாக பணி செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டது என்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

66 percent of Indian white collared employees salary below Rs.15,000

66 percent of Indian white collared employees salary below Rs.15,000 |புரோட்டா மாஸ்டர் சம்பளம் கூட ஒயிட்காலர் ஊழியர்களுக்கு இல்லை: 65% இந்தியர்களின் சம்பளம் இவ்வளவுதானா?

Story first published: Friday, July 8, 2022, 10:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.