கேரள மாநிலம் ஆலத்தியூரில் சாலை வளைவில் கவனக்குறைவுடன் திரும்பிய பேருந்து, பக்கவாட்டில் இருந்த ஸ்கூட்டி மீது மோதி அதன் மீது ஏற இருந்த சூழலில், ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஸ்கூட்டி ஓட்டுநரை காப்பாற்றினார்.
மலப்புரம் – ஆலத்தியூர் சந்திப்பு பகுதியில் பேருந்து மோதியதில் சக்கரத்துக்கடியில் ஸ்கூட்டியுடன் நபர் சிக்கிக்கொண்ட நிலையில், அதனை பார்த்த ஒருவர் கூச்சலிட்டதோடு, பேருந்தை வேகமாக தட்டியும் நிற்கச்செய்தார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.