சென்னையை அடுத்த வானகரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கான பணிகள் வானகரத்தில் நடைபெற்று வந்தன.
இந்த பணிகளை ஆய்வு செய்ய மூத்த நிர்வாகிகள் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கால் இடறி கீழே விழுந்தார். அருகில் இருந்த மற்ற நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM