மதுரை: மதுரையில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் வவீடு புகுந்து இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை பொன்மேனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த அபர்ணா(19) வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அபர்ணா கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஹரிஹரன் வீடு புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.