இந்த ஆண்டின் தொடக்கம் வரை கிரிப்டோ கரன்சி மதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென அதன் மதிப்பு சரிய ஆரம்பித்தது.
மதிப்பு சரிந்ததால் கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்தின் மீது பலர் நம்பிக்கையை இழந்தனர்.
பொருளாதார வல்லுனர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றும் அதில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் கிரிப்டோகரன்சியின் சரிவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த சிங்கப் பெண்.. யார் இந்த கீதா கோபிநாத்?
கிரிப்டோகரன்சியின் மதிப்பு
ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு சிறு நம்பிக்கை அளித்துள்ளது. இன்றைய கிரிப்டோகரன்சியின் மதிப்பை பார்த்தோம் என்றால் பாலிகான், ஷிபு இனு, பிட்காயின் ஆகியவை கடந்த 24 மணி நேரத்தில் 11% வரை உயர்ந்துள்ளது.
மதிப்பு உயர்வு
சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின், கடந்த 24 மணி நேரத்தில் 7.83 சதவீதம் உயர்ந்து $21,961.59 எனவும், கடந்த ஏழு நாட்களில் 8.15 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் எத்தரியம் 6.71 சதவீதம் அதிகரித்து $1,249.91 ஆக உள்ளது. இதன் வாராந்திர உயர்வு 14.36 சதவீதமாக உள்ளது. XRP என்ற கிரிப்டோகரன்சி 7.17 சதவீதம் முன்னேறி $0.3528 ஆக உள்ளது.
இன்னும் உயரலாம்
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் கிரிப்டோகரன்சியின் சந்தை தற்போதைய சரிவிலிருந்து மீண்டு வரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு இருந்த உச்ச நிலையை அடையுமா? என்பது சந்தேகம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். கிரிப்டோகரன்சி இனி மீள வாய்ப்பே இல்லை என்று சில பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்த நிலையில் தற்போது அது பொய்யாகியுள்ளது.
பிட்காயின்
MuffinPay நிறுவனர் மற்றும் சி.இ.ஓ திலீப் சீன்பெர்க் அவர்கள் கிரிப்டோகரன்சி குறித்து கருத்து கூறிய போது ‘கிரிப்டோகரன்சி மீண்டும் உயரும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கிரிப்டோகரன்சி மதிப்பு உயரும் என்றும் டிசம்பர் இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் இதுவரை இல்லாத அளவுக்கு உயரும் என்றும் கூறினார். குறிப்பாக பிட்காயின் $70,000 வரை உயரக்கூடும் என்றும் கூறியுள்ளார். அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் சில பல காரணங்களால் கிரிப்டோகரன்சியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
மீண்டும் உச்சம்?
கடந்த மே மாதம் படுவீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி மதிப்பு இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தொடர்ச்சியாக உயர ஆரம்பித்தால் ஏற்கனவே இருந்த உச்சத்தை நெருங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Crypto prices again uptrend, what says experts
Crypto prices again uptrend, what says experts | மீண்டும் உயரும் கிரிப்டோகரன்சி.. என்ன ஆச்சு பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு