மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய புனே, சதாரா, ராய்கட், ரத்தினகிரி, சிந்து துர்க், கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கனமழை முதல் அதிகன மழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.