யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையை முன் வைத்த பொதுமக்களின் ஒரு பகுதியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் ,அவர்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று (08) காலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்களுக்குரிய எரிபொருள் டோக்கன் வழங்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினருக்கான பெற்றோல் விநியோகத்தினை இன்று காலை11 மணிக்கு பின்னர் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகளையும் யாழ் மாவட்ட செயலகம் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
ஏற்கனவே யாழ் மாவட்ட செயலத்தினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு அமைவாக பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் காலை 11:00 மணியின் பின்னர்
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஒரு தொகுதியினருக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.
Logini Sakayaraja