உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடமிருந்து மீட்ட பாம்புத்தீவில் உக்ரைன் கொடியை ஏற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஜூன் 30ஆம் திகதி ரஷ்யப் படைகள் வசமிருந்த பாம்புத்தீவை மீட்டெடுத்த உக்ரைன் வீரர்கள், அத்தீவில் உக்ரைன் கொடியை ஏற்றுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ளது.
வெறும் 700 அடி நீளமும் வெறும் பாறைகளும் கொண்ட ஒரு தீவுதான் இந்த பாம்புத்தீவு. ஆனால், அது கருங்கடல் பகுதியில் அமைந்துள்ளதன் காரணமாக அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆம், ரஷ்யாவைப் பொருத்தவரை, கருங்கடல் என்பது மத்திய தரைக்கடல் பகுதிக்குள் நுழையும் ஒரு படியாகும். அதாவது, ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி இந்த கருங்கடல். ஆகவே, அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்ய அதிகாரத்தை வெளிக்காட்டுவதுடன் தெற்கு ஐரோப்பாவிலுள்ள முக்கிய சந்தைகளுக்கான பொருளாதார பாதையை பாதுகாப்பதும் ஆகும்.
ஆகவேதான், கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் சிறிய தீவான பாம்புத்தீவை பிடிக்க ரஷ்யாவும், அதை மீட்டெடுக்க உக்ரைனும் ஆர்வம் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
Ukrainian military releases video of Ukrainian flag raised on Snake Island after reclaiming the island from Russian forces on June 30.
The island has strategic importance because of its location in the Black Sea. https://t.co/vLWPzLBxMR pic.twitter.com/ou6cXZchLo
— ABC News (@ABC) July 8, 2022