இன்றைய காலக்கட்டத்தில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். ஆனால் வேலையே செய்யாமல் எப்படி சம்பளம் பெறுவது என வாங்கிய சம்பளத்தினையும் திரும்ப கொடுத்துள்ளார் ஒரு கல்லூரி உதவி பேராசிரியர்.
கேட்கும்போதே நெகிழ்ச்சியினை ஏற்படுத்தும் இந்த சம்பவமானது பீகாரின் முசாஃபர்பூரில் தான் நடந்துள்ளது.
மாணவர்களுக்கு தான் சரியாக பாடம் எடுக்க வில்லை என கூறி, பணியில் சேர்ந்தத்தில் இருந்தே தான் பெற்ற சம்பளத்தினை வாரி கொடுத்துள்ளார் இந்த பேராசியர்.
ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கைநிறைய சம்பளம், கொட்டிக் கிடக்கும் வேலை..!
ஹிந்தி பேராசிரியர்
உண்மையில் இதுபோன்று நடக்குமா? என்பது தற்போது வரையில் நம்ப கடினமாகத் தான் இருக்கிறது. ஆனால் உண்மை தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்த உதவி பேராசிரியர் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழக்கத்தின் கீழ் இயங்கும் நிதிஷ்வர் கல்லூரியில் ஹிந்தி கற்பித்து வரும் ஆசிரியர் லாலன் குமார்.
எப்போது பணி?
உதவி பேராசிரியராக கடந்த 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்த லாலன் குமார், பணியில் சேர்ந்தத்தில் இருந்தே மாணவர்கள் யாரும் வரவில்லையாம்.
மாணவர்களுக்கு கற்பிக்காத நிலையில், நான் ஏன் சம்பளத்தினை பெற வேண்டும் என கூறி, தனது சம்பளத்தினை திரும்ப செலுத்த அதிரடியான ஒரு முடிவினையும் எடுத்துள்ளார்.
மனசாட்சி இடம் கொடுக்கல?
அது மட்டும் அல்ல, பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்க எனது மனசாட்சி எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆக எனக்கு இந்த சம்பளம் வேண்டாம் என அதிரடியான ஒரு கடிதத்தினையும் எழுதி, அதோடு ஒரு செக் லீப்பினையும் சேர்த்து, பல்கலைக் கழக துணைவேந்தருக்கு அனுப்புயுள்ளார்.
மாணவர்கள் யாரும் இல்லை
ஜே என் யு-வில் முதுகலை படித்த லாலன் குமார் டெல்லியில் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டம் மற்றும் எம்பில்லையும் டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்துள்ளார்.
மேலும் குமார் துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் நான் சேர்ந்தபோது, முதுகலை படிப்புகளுக்கு பாடம் எடுக்க நான் பணியமர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது இங்கு பணியமர்த்தப்பட்ட நிலையில் மாணவர்கள் யாரும் வரவில்லை. பல முறை இடமாற்றமும் கேட்டு விட்டேன்.
வேதனையளிக்கும் நிகழ்வு
ஆனால் இன்று வரையில் அது மறுக்கப்பட்டு விட்டது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்குவேன் எனவும் கூறியுள்ளார்.
பல பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் திணறி வரும் நிலையில், மாணர்வர்களே இல்லா கல்லூரியில் வேண்டாம் வேண்டாம் என ஆசியர்கள். இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த மனவேதனையளிக்கின்றன. இதனை பல்கலைக் கழக நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
No Students To Teach, So Here’s The Salary Back: A touching incident in bihar
No Students To Teach, So Here’s The Salary Back: A touching incident in bihar/ரூ. 24 லட்சம் சம்பளத்தினை தூக்கி போட்ட உதவி பேராசிரியர்.. காரணத்த கேட்ட அசந்துருவீங்க!