விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் (05) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காமினி செனரத்
ஜனாதிபதியின் செயலாளர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
06.07.2022