விவோ நிறுவனம் தொடர்புடைய 119 களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் மீது பணப்பரிவர்த்தனை முறைகேடு புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்தின் 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் இரண்டு முக்கிய சீன நிர்வாகிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இந்தியாவில் விவோ நிறுவனத்தின் 23 துணை நிறுவனங்கள் செயல்படுவதாகவும் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து 62 ஆயிரம் 425 கோடி ரூபாய் பணத்தை சீனாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.