இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியான நிலையில், ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
உத்தரகாண்ட்டின் ராம்நகரில் உள்ள தேலா ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பஞ்சாபை சேர்ந்த குடும்பத்தார் 10 பேர் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தேலா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்களில் 9 பேர் இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு, காரில் இருந்த சிறுமியை உயிருடன் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆற்றில் கவிழ்ந்த கார் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், 3 பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.