ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு! பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், நாளை (ஜூலை 9ந்தேதி 2022) ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு  அறிவித்து உள்ளது. அதன்படி, தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் .  அன்றைய தினம் உத்தியோகபூர்வ கேளிக்கைகள் எதுவும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்ததால், அதே இடததில் சுருண்டு விழுந்த அபேவை அவரது பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  ஷின்சோ அபேவின் மறைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி அபேவுடன் தன்னுடைய நெருக்கம் குறித்து புகைப்படத்துடன் பகிர்ந்து  இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த நாடாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஷின்சோ அபே உடனான எனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் பிரதமரான பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றிய அவரது கூர்மையான நுண்ணறிவு எப்போதும் எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். முன்னாள் பிரதம மந்திரி ஷின்சோ அபேவுக்கு அளிக்கும் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக, 9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு  அறிவித்து உள்ளது. அதன்படி, தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் அனைத்து கட்டிடங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் .  அன்றைய தினம் உத்தியோகபூர்வ கேளிக்கைகள் எதுவும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.