11 நாடுகளுக்கு ஜாலி ட்ரிப்.. மளிகை கடை பெண் சாதித்தது எப்படி.. பணத்தை சேமிக்க சொல்லும் டிப்ஸ்!

பொதுவாக எல்லோருக்குமே குடும்பத்துடன் வருடத்தில் ஒரு முறையேனும் ஜாலியாக ஊர் சுற்றி வரவேண்டும். புதிய புதிய இடங்களுக்கு செல்ல வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்ல முடியாவிட்டாலும், இந்தியாவில் ஏதேனும் ஒரு விருப்பமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!

ஆனால் இதற்கு பெரும் தடையாய் இருப்பதே நிதி பிரச்சனை தான். எனினும் பணம் ஒரு தடையே அல்ல, யார் வேண்டுமானாலும் ஈஸியாக டூர் போகலாம். அதற்கு திட்டமிட்டு சேமித்தாலே போதும் என்கிறார் கேராளாவினை சேர்ந்த ஒரு 61 வயதான பெண்மணி.

பயணம் பற்றிய கனவு

பயணம் பற்றிய கனவு

கேரளாவினை சேர்ந்த மோலி ஜாய்க்கு (61 வயது), சிறு வயதில் இருந்தே பயணத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. எனினும் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பினையே கூட முழுமையாக முடிக்க முடியாத சூழலில் இருந்த மோலிக்கு, பயணம் பற்றிய கனவு என்பது, வெறும் கனவாகவே இருந்தும் வந்துள்ளது.

பாதியில் நின்று போன படிப்பு

பாதியில் நின்று போன படிப்பு

எனினும் பயணத்தின் மீது கொண்டிருந்த தீராத மோகத்தின் காரணமாக, இன்று அதனை அழகான நினைவுகளாகவும் மாற்றியுள்ளார். குடும்ப வறுமை காரணமாக 10 வகுப்பு பள்ளி வகுப்பே பாதியில் நின்றுபோனது. எர்ணாகுளத்தில் உள்ள திருவாங்குளத்தில் குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர் மோலி.

வாழ்வாதாரத்திற்காக மளிகை கடை
 

வாழ்வாதாரத்திற்காக மளிகை கடை

 

சித்திரபுழாவைச் சேர்ந்த ஜாய் என்பதை திருமணம் செய்து கொண்ட மோலி, 1996ல் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறிய மளிகை கடையை தம்பதியராக வைக்கின்றனர்.

அந்த சமயத்தில் எப்போதாவது தம்பதியராக தென் இந்தியாவில் சிறிய பயணம் செல்வார்களாம்.

 

 அதிகரித்த ஆர்வம்

அதிகரித்த ஆர்வம்

தனது சிறிய மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பத்திரிக்கைகளில் வரும் பயணம் குறித்தான குறிப்புகளை கூட, தேடிப்பிடித்து படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் மோலி. ஏற்கனவே பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட மோலிக்கு இந்த செய்திகள் மேலும் ஆசையை தூண்டின.

தனியாளாக கடை நிர்வாகம்

தனியாளாக கடை நிர்வாகம்

கடந்த 2004ம் ஆண்டு மோலியின் கணவர் ஜாய் இறந்த பிறகு எல்லாமே ஸ்தம்பித்து போயின. அப்போது அவர்களது 20 வயது மற்றும் 18 வயது குழந்தைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர். எனினும் தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் தொடர்ந்து தனது கடையினை நடத்தி வந்த மோலி, தனியாளாக நின்று கவனித்து வந்தார்.

தென் இந்தியாவில் சுற்றுலா

தென் இந்தியாவில் சுற்றுலா

அதன் பிறகு தோழியின் உதவியுடன் வெளிநாட்டுக்கும் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் செலவு பற்றி கவலைப்பட்ட மோலி, பயணத்தின் மீது கொண்ட தீரா காதலால், மகன், மகளின் உதவியையும் நாடியுள்ளார்.

 மகன், மகள், சேமிப்பு உதவி

மகன், மகள், சேமிப்பு உதவி

அதன் பிறகு தோழியின் உதவியுடன் வெளி நாட்டுக்கும் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் செலவு பற்றி கவலைப்பட்ட மோலி, பயணத்தின் மீது கொண்ட தீரா காதலால், மகன், மகளின் உதவினையும் நாடியுள்ளார்.

அவர்களும் தனியாளாக தந்தைக்கு பிறகு வளர்த்த தாயின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல், ஊக்கப்படுத்தி அனுப்பியுள்ளனர். அவற்றோடு தனது சேமிப்பு பணத்தையும் பயன்படுத்தி பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

 பலே திட்டம்

பலே திட்டம்

இதற்காக பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு, 15 நாட்களில் இத்தாலி, பிரான்ஸ், வாடிகன், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி என பல நாடுகளை சுற்றிவர திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு வயதான தம்பதிகளும் சேர்ந்த பயணங்களுக்கு மத்தியில் மோலி தனியாளாக வலம் வந்துள்ளார். அந்த பயணத்தினையும் ரசனையுடன் சுற்றியுள்ளார்.

 

எவ்வளவு செலவு?

எவ்வளவு செலவு?

நான் பயணத்தினை மிகவும் ரசித்தேன். புதிய நண்பர்களை உருவாக்கினேன். இது எனது பயணத்தின் சிறந்த பகுதியாகவும் இருந்தது. மேலும் எனது சிறிய ஆங்கிலத் திறனும் பயணத்தின் போது, எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது என தி பெட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் நெகழ்ச்சியுடன் கூறுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் ரூபாயினை சேமித்து, 11 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் மோலி.

 

 பணம் சேமிப்பு எப்படி?

பணம் சேமிப்பு எப்படி?

2012ம் ஆண்டு முதல் பயணத்திற்காக 1.5 லட்சம் ரூபாய் செலவாகியது. அதன் பிறகு அடுத்த பயணத்திற்கான தொகையை சேமிக்க ஆரம்பித்தேன். பயணம் முடிந்து வந்த பிறகு வார விடுமுறை நாட்களில் கூட கூடுதல் வருமானம் ஈட்ட கடையை திறப்பதாக கூறியுள்ளார். மேலும் சில சிட் ஃபண்டுகள், சில சமயங்களில் பயணத்திற்காக தங்க நகையை கூட அடகு வைத்ததுண்டாம்.

 வட மாநிலங்களுக்கு பயண திட்டம்

வட மாநிலங்களுக்கு பயண திட்டம்

2017ம் ஆண்டில் தனது அடுத்த பயணத்திற்காக மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்றுள்ளார், அதன் பிறகு வட இந்தியாவுக்கும், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களை இன்னும் பார்க்கவில்லை. வெளிநாட்டு பயணங்களின் இடைப்பட்ட காலத்தில் இது போன்ற பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறந்த பயண அனுபவம்

சிறந்த பயண அனுபவம்

மோலிக்கு விருப்பமான பயணம் 2019ல் நடந்தததாகவும், இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றதாகவும், எனினும் இந்த முறை லண்டன் -, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ், ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோம்முக்கு சொகுசு பயணம் மேற்கோண்டதாகவும், இது சிறந்த பயணமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மற்றொரு முறை முடிந்தால் ஐரோப்ப செல்ல விரும்புகிறேன் என்றும் மோலி தெரிவித்துள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு நிறுத்தம்

கொஞ்ச காலத்திற்கு நிறுத்தம்

கொரோனா காலத்தில் நின்று போன பயணம், கடந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் தொடங்கியுள்ளார். நியூயார்க் நகரம் சென்ற மோலி, வாஷிங்டன், பிலடெல்பியா, பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சிக்கு சென்றார்.

லாஸ் வேகாஸில் இருக்கும் மனதை மயக்கும் நயாகரா நீர் வீழ்ச்சி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ ஆகியவை நாங்கள் பார்த்த இடங்களில் மிக சிறந்த இடங்கள். எனினும் நான் எதிர்பார்த்தை விட செலவுகள் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சிறிது காலத்திற்கு என பயணத்தை நிறுத்த வேண்டியதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

 

உயிருள்ள வரை நிறுத்த மாட்டேன்

உயிருள்ள வரை நிறுத்த மாட்டேன்

தனது பள்ளி பருவத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல முடியாமல் இருந்த மோலி, தனது சிறிய வருமானத்தினை மிச்சப்படுத்தி தனக்கு பிடித்தமான, விருப்பமான பயணங்களை செய்து வருகின்றார். நடப்பு ஆண்டில் பல இந்திய மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், நிதி பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் நான் எனது பயணத்தினை நிறுத்த மாட்டேன். எனது இறப்பு வரை பயணிப்பேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How did the grocery store owner travel to 11 countries? How did she save money for this?

How did the grocery store owner travel to 11 countries? How did she save money for this?/11 நாடுகளுக்கு ஜாலி ட்ரிப்.. மளிகை கடை பெண் சாதித்தது எப்படி.. பணத்தை சேமிக்க சொல்லும் டிப்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.