அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று, ஈபிஎஸ் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தது.
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு. தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும். கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை.
சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும்” ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 11 ஆம் தேதி, காலை 9 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று சற்று முன்பு வெளியாகி உள்ளது.
பொதுக்குழு தொடர்பாக நாளைய தினமே தீர்ப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் ஓ பன்னீர்செல்வம் சார்பில் மனோஜ் பாண்டியன், குரு கிருஷ்ணகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே சந்திக்க உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
#BREAKING || சுமார் 1000 சவரன் நகை… கட்டுக்கட்டாக பணம்…?! ரெய்டில் சிக்கியது என்ன? அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி.!#KAMATAJ #ADMK #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/zE5GflcgDy
— Seithi Punal (@seithipunal) July 8, 2022