Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, அவரைக் கண்டித்து அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகினர். மேலும் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். போரிஸ் ஜான்சனின் ராஜினாமா முடிவை தொழிலாளர் கட்சி ‘நல்ல செய்தி’ என்று வரவேற்றுள்ளது.
Tamil News Latest Updates
லீனா மணிமேகலைக்கு லுக்அவுட் நோட்டீஸ்
‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், போபால் காவல்துறை இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் கொரோனா
சென்னையில் வியாழக்கிழமை மேலும் 1,011 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 7,397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்றடையலாம் என. இது நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தேனி ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட, அவருக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.