தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விக்ரம். ‘சேது’ தொடங்கி ‘கோப்ரா’ பல படங்களில் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் செம்படம்பரில் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதற்காக சென்னையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்ரமின் உடல் நலம் குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் “விக்ரமுக்கு அதிக காய்ச்சல் இருந்ததன் காரணமாக அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று மாலை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் இதன் காரணமாக விக்ரமால் பங்கு பெற முடியாது” எனவும் தெரிவித்திருக்கின்றனர்.