WFH-ல் இருக்கீங்களா.. ரெடியாகிக்கோங்க.. டிசிஎஸ் விரைவில் உங்களை அழைக்கலாம்!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், தனது ஊழியர்களை விரைவில் அலுவலத்திற்கு அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெரும்பகுதியினைரை வீட்டில் இருந்தோ அல்லது ஹைபிரிட் முறையிலோ பணிபுரிய கூறி வருகின்றன.

குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி, 20% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

11 நாடுகளுக்கு ஜாலி ட்ரிப்.. மளிகை கடை பெண் சாதித்தது எப்படி.. பணத்தை சேமிக்க சொல்லும் டிப்ஸ்!

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 14,136 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. எனினும் அட்ரிஷன் விகிதமானது தொடர்ந்து 19.7% ஆக உள்ளது.

ஜூன் 30, நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது, 6,06,331 ஆக அதிகரித்துள்ளது.

சம்பளம் உயர்வு

சம்பளம் உயர்வு

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறுகையில், டிசிஎஸ் அதன் ஊழியர்களின் சம்பளத்தை 8% வரை உயர்த்தியுள்ளது. சிறந்த செயல் திறன் கொண்டவர்கள் இன்னும் பெரிய உயர்வினை பெற்றுள்ளனர். இது உள்நாட்டில் அனைத்து முக்கிய சந்தைகளிலும் திறன்களை கவர உதவிகரமாக இருக்கும்.

பெண்களின் பங்கு
 

பெண்களின் பங்கு

தொழிலாளர்கள் 153 நாடுகளை சேர்ந்தவர்களாகவும், அதில் 35.5% பெண்களும், உள்ளனர். இதற்கிடையில் நிறுவனம் ஊழியர்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு திரும்புவதை நிறுவனம் படிப்படியாக முயற்சித்து வருகின்றது. இது வரும் காலாண்டில் இன்னும் துரிதமாகலாம்.

இதற்கிடையில் கடந்த ஜூன் காலாண்டில் லாபம் 5.2% உயர்ந்து, 9008 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது.

நிகர வருமானம்

நிகர வருமானம்

தொடர்ந்து ஐடி துறையில் தேவையானது வலுவாக இருந்து வருகின்றது. குறிப்பாக கிளவுட் சேவை, கன்சல்டிங் & சேவை, இண்டகிரெஷன் என துறைகளில் தேவை வலுவாக இருந்தது.

இதற்கிடையில் முதல் காலாண்டில் வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும், 16.2% அதிகரித்து, 52,758 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வருமானம் 5.2% அதிகரித்து 9478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மார்ஜின் 18% ஆகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்

English summary

Employees who are at TCS work from home can be called to the office soon

Employees who are at TCS work from home can be called to the office soon/WFH-ல் இருக்கீங்களா.. ரெடியாகிக்கோங்க.. டிசிஎஸ் விரைவில் உங்களை அழைக்கலாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.