சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை புகார் அளித்தார். புகாரை திரும்பப் பெறுவதாக துணை நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு ரத்து செய்யப்பட்டது.