திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிவேகமாக சென்ற கார், சாலையோர கடைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரிச்சாலை பகுதியில் சைலோ ரக காரில் சென்ற சுரேஷ் என்பவர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகள் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். காரில் ஓட்டுநரும், உடனிருந்தவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வியாபாரிகள் அவர்களை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சுற்றுலா பயணி மற்றும் சாலையோர வியாபாரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.