நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தமிழ் பாரம்பரிய முறையில் தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர் லோகேஷ். இவர் நியூசிலாந்தில் படித்த நிலையில் அங்கேயே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது நியூசிலாந்தில் செவிலியராக பணிபுரிந்து வரும் விக்டோரியா ஹேமில்டன் என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து லோகேஷ், விக்டோரியா ஹேமில்டன் திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள முருகன் கோவிலில் தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, தாலி கட்டி, உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.