கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தாம் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியை விலகுமாறு கூறி நாட்டில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிர நிலையை அடைந்துள்ளன.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரணிலுக்கு உறுதியளித்த கோட்டாபய
இந்த நிலையிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கும் முடிவுகளுக்கு தாம் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.