ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மராஜ். இவருக்கு திருமணமாகி சிவரஞ்சனி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிவரஞ்சனியின் பெற்றோர் அவரை தொடர்ப்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் வீடு பூட்டியிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் நரசிமன்னின் சகோதரிக்கு அழைத்து கேட்டுள்ளனர்.
அப்போது அவர், பிள்ளைகளை தான் அழைத்து வந்துவிட்டதாகவும் சிவரஞ்சனிக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு துர்நாற்றம் வீசியது.அங்கே உள்ள பிளாஸ்டிக் பையில் சிவரஞ்சனியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து, உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.அவர் சம்பதிக்கும் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இந்நிலையில், அவரது புதிய வீட்டை 28 லட்சம் ரூபாய்க்கு விற்று அதனை லாட்டரியில் முதலீடு செய்ய போவதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின், அந்த பணத்தை வைத்து ரம்மி விளையாடியுள்ளார். பணத்தை இழந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையில் இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அதன் பின் அவரது சடலத்தை பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்துள்ளார். அதன் பின் குழந்தைகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து, அவரைபிடிக்க தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.