புதுடெல்லி: செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் இணைய தள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்படுகிறது. இதன் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர். இந்து துறவிகள் சிலர் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். புகாரின் பேரில் உ.பி. சீதாபூர் போலீஸார் ஜுபைரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜுபைர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், முகம்மது ஜுபைருக்கு 5 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக ட்விட்டரில் முகம்மது ஜுபைர் எந்தவொரு கருத்தும் பதிவு செய்யக் கூடாது, ஆதாரங்களை அழிக்க முயற்சிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.