இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் வைத்து உள்ளுர் நேரப்படி பிற்பகல் 02:30 PM மணிக்கு தங்களது இரண்டாவது டி-20 போட்டியில் மோதிக் கொண்டனர்.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஜடேஜா 29 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 171 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 121 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை
புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்கள் பந்துவீசி வெறும் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
கூடுதல் செய்திகளுக்கு: பதவி விலகுகிறார் கோட்டாபய ராஜபக்ச: திகதியை அறிவித்த இலங்கை சபாநாயகர்!
மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால் இங்கிலாந்து எதிரான டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது.