லண்டன்,
இங்கிலாந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
அதைடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, நிதிமந்திரி பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோந்த ரிஷி சுனக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவா் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவா் பிரதமராகத் தோந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.
அவரைத் தவிர, மேலும் பல எம்.பி.க்கள் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க முன்வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.