மாலை நேரத்தில் பொழுதுபோக்காக எதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு பெஸ்ட் உளுத்தம் வடை. உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் இந்த வடை உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பலனை கொடுக்கிறது. உளுத்தம் வடை மட்டும்லலாது வடை என்றாலே பருப்பை ஊறவைத்து அரைத்து அதன்பிறகு தான் செய்ய வேண்டும்.
அரைத்த மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் தான் வடை செய்ய முடியும். இதனால் வடை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதற்கு சில மண நேரங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் ஒரு சில முறைகளை பயன்படுத்தினால் நீங்கள் ஆசைப்பட்டவுடன் வடை சாப்பிடலாம்
இதற்கு வீட்டில் இட்லி மாவு இருந்தாலே போதுமானது. தோசைக்கு பயன்படுத்தப்படும் இட்லி மாவுடன் சில பொருட்களை சேர்த்து செய்தால் சுவையான வடை செய்யலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 5 கரண்டி
கடலை மாவு – 3 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன்
வெங்கயம் – 1
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை கொத்தமல்லி – தலா ஒரு தழை
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொறித்து எடுக்கும் அளவுக்குக
செய்முறை :
முதலில் இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் எத்துக்கொண்டு அதில் ரவை, கடலை மாவு, சேர்த்து ஒன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கலவை சிறிது நேரம் ஊறியவுடன் வடை மாவு பதத்திற்கு வந்துவிடும். அதன்பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி உள்ளிட்வற்றை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்ஃ
இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். சில நிமிடங்களில் வடை மாவு தயாராகிவிடும். அதன்பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காயும் வரை சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கையில் எடுத்து தட்டி எண்ணெயில் போடவும். வடை நன்றாக வெந்து பொன்னிறமாக வந்தவுடன் வடையை வடுத்துவிடலாம். சுவையாக உளுத்தம் வடை தயார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“