iQOO Z6 SE Launch date: iQOO இந்தியாவில் பல முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிறுவனம் இந்திய சந்தையில் iQOO நியோ 6 போனை அறிமுகம் செய்தது. கூடுதலாக, பல Z6 தொடர் ஸ்மார்ட்போன்களான iQOO Z6, iQOO Z6 5G, iQOO Z6 Pro 5G ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்தியது.
இப்போது, கிடைத்திருக்கும் புதிய தகவல்களின்படி, நிறுவனம் புதிய நடுத்தர ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது iQOO Z6 SE (Speed Edition) என அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5G Adani Group: அம்பானிக்கு ஜியோ… அதானிக்கு? டெலிகாம் துறையில் கால்பதிக்கும் குழுமம்!
iQOO இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த டீஸர் பக்கம் திறக்கப்பட்டுள்ளது. போனின் சில தகவல்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளன. அவற்றை விரிவாகக் காணலாம்.
50 இன்ச் திரையில் தடங்கலற்ற மொழுதுபோக்கு – விற்பனையைத் தொடங்கிய OnePlus TV 50 Y1S Pro ஸ்மார்ட் டிவி!
ஸ்மார்ட்போனின் வன்பொருள் அல்லது மென்பொருளை குறித்த எந்தத் தகவலையும் நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்த போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
Twitter Deal: ட்விட்டர் எனக்கு வேண்டாம் – பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!
விரைவில் இந்த புதிய ஐக்யூ இசட்6 எஸ்இ போன் குறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
விரைவில் விற்பனைக்கு வரும் iQOO 9T போன்
இதுதவிர, iQOO 9T எனும் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறும் ரூ.9,000 பட்ஜெட்டில் வெளியான Lava Blaze ஸ்மார்ட்போன்!
இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) புராசஸர் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வேகமான 120W சார்ஜிங் ஆதரவுடன் 4800mAh பேட்டரியும் கொடுக்கப்படலாம்.