இலங்கையில் 2 நாட்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை நிறுத்தம் போராட்ட அச்சுறுத்தல் எதிரொலி

கொழும்பு,

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் கடந்த 27-ந்தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனை நடந்து வந்தது.

இந்த நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கு எதிராக முதன் முதலில் போராட்டம் வெடித்து 3 மாதங்கள் நிறைவடைவதையொட்டி நாடு முழுவதும் மிகப்பெரும் போராட்டங்கள் நடைபெறக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நேற்றும், இன்றும் பெட்ரோல்-டீசல் விற்பனையை லங்கா ஐ.ஓ.சி. நிறுத்தி வைத்துள்ளது. இந்த போராட்டங்கள் தொடர்பாக அரசு விடுத்த எச்சரிக்கை காரணமாக 2 நாள் விற்பனையை நிறுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி.யின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா கூறியுள்ளார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.