கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய பதவி விலக வேண்டும் என்று மத தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாக பதவி விலகுவதாக கோத்தபய அறிவிக்க வேண்டும் என்றும், இடைக்கால அரசு பொறுப்பேற்று இலங்கையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.