இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரார்கள்; வீடியோ

Sri Lanka protesters storm presidential palace as economic crisis deepens: இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அவரது செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அதிபர் மாளிகை கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வார இறுதியில் திட்டமிடப்பட்ட பேரணிக்கு முன்னதாக அதிபர் கோட்டபய ராஜபக்சே தனது பாதுகாப்பிற்காக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்.

இதையும் படியுங்கள்: அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்; இலங்கையில் பரபரப்பு

முன்னதாக, போலீசார் ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்புகளை மீறி, கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் இல்லத்திற்குள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், கோபமாக இருந்த போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்தைச் சுற்றி முற்றுகையிட்டதை தடுக்க முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அதிபர் அலுவலகத்தில், வேலிகளைக் கடந்து, அதிபரின் அலுவலகமாக மாற்றப்பட்ட ஆங்கிலேய கால கட்டிடத்தை தாக்கிய போராட்டக்காரர்களை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுக்க முயன்றனர். சமூக ஊடகங்களில் வெளிவந்த சம்பவத்தின் வீடியோ கிளிப்புகள், கட்டிடத்தின் அறைகள் மற்றும் தாழ்வாரங்கள் வழியாக மக்கள் அணிவகுத்துச் சென்றபோது அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்புவதைக் காட்டியது. “கோட்டா வீட்டுக்குப் போ” என்று மக்கள் கோஷமிட்டனர்.

சமூக ஊடக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்ட காட்சிகளில் ஒன்று, அதிபரின் வீட்டிற்குள் உள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் நீராடுவதைக் காணலாம்.

அதிபர் மாளிகையின் சுவர்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்காமலும், வன்முறைச் செயல்களில் ஈடுபடாமலும் தற்போது அதனை ஆக்கிரமித்துள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில், இரண்டு போலீசார் உட்பட குறைந்தது 30 பேர் காயமடைந்து கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திவால்நிலையை நோக்கிச் செல்லும் இலங்கை, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இதனால் மக்கள் குறைவாக இருப்புகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கை தேசத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அதிபர் பதவி விலகக் கோரி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் அரசியல் அமைதியின்மையை உருவாக்கியுள்ளனர். மே 9 அன்று ஜனாதிபதியின் மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகுவதற்கும், இதேபோன்ற எதிர்ப்புக்கள் தான் வழிவகுத்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.