இலங்கை பிரதமர் ரணில் இல்லத்தை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள்| Dinamalar

கொழும்பு: இலங்கையில் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்கு தீ வைத்தனர்.

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். அதிபர் மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று இரவில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால் பிரதமர் இல்லம் தீக்கிரையானது. மக்ககள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.