ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம், அசோகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. காட்டன் துணி, ரயான் துணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரயான் ரகம் மட்டும் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. ரயான் நூல் விலை ஏற்றம் மற்றும் இருப்பு குறைக்கும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் ரயான் ரகம் தயாரிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.