பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று (09) ஊடகவியலாளர் சிலர் ,பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ,விiவாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் ,பிரதமரின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிரச ஊடக வலைப்பின்னலுக்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கை பொலிஸ் கவலை தெரிவிப்பதாகவும் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
.