தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் வீராங்கனை லிசிலி லீ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த 30 வயதான லீ கடந்த 2013ல் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார்.
இவர் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3315 ரன்களை குவித்துள்ளார். லீயின் அதிகபட்ச ஸ்கோர் 132* ஆகும்.
அதே போல 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1896 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் 101 ஆகும். 2 டி0 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக லீ அறிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில், பல கலவையான உணர்வுகளுடன் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என நம்புகிறேன்.
எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற எனது கனவை நிஜமாக்க பல தியாகங்கள் செய்த எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது மனைவி தன்ஜாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
லீ தனது பெண் தோழியான தன்ஜாவை கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.