ஓபிஎஸ் கூடாரம் காலியாகிறதா… கடைசி நேரத்தில் ஓடிவந்த 18 பேர்… "வலிமை" உடன் எடப்பாடி தரப்பு.! 

 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும் ஓ பன்னீர்செல்வம் ஒரு பக்கமும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை யார் கைப்பற்றுவார் என்பதை விட, பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி விடக் கூடாது என்று, ஓ பன்னீர்செல்வம் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

அதே சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தக்கூடாது என்று தடை கோரிய வழக்கின். தீர்ப்பு அதே நாள் காலை 9 மணிக்கு வெளியாக இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க., எடப்பாடி கே பழனிசாமி தரப்புக்கு, ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. இது ஓ பன்னீர்செல்வத்தை பெரும் சோகத்தில் அழுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்று தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பொதுக்குழு உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய நிலையில், இன்று காலை 9 பேர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் வரவேண்டும் என்று தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 

மேலும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. பார்த்திபன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலச்சந்தர், தனலட்சுமி சொக்கலிங்கம், பேரவை இணைச்செயலாளர் கரிகாலன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நாராயணன், தேனி ஒன்றிய துணைச்செயலாளர் தயாளன் உள்ளிட்ட 9 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,441 ஆக அதிகரித்துள்ளது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.