ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக.. கொந்தளிப்பில் இபிஎஸ் தரப்பு.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது காமராஜர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது.

2015-2021 காலத்தில் கணக்கில் வராத சொத்துக்களை காமராஜர் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பாதித்த பணத்தை தனது மகன்கள் நடத்தும் நிறுவனங்களின் முதலீடு செய்துள்ளார். மேலும், வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர், என் ஏ ஆர் சி ஹோட்டல் கட்டுமானம் செய்ய முதலீடு செய்துள்ளார். 

2015 தொடக்கத்தில் ரூபாய் 1,39,54,290 அளவில் இருந்த சொத்து மதிப்பு, 2021 முடிவுகள் ரூபாய் 60,24,05,039 என்ற அளவில் உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2015-2021 இவரது வருமானம் ரூபாய் 12.99 கோடி, செலவு ரூ.12.59 கோடி என தெரிவித்துள்ளனர். வருமானம் மற்றும் வரவு செலவு தாண்டி பார்க்கும்போது ரூபாய் 58,84,50,879 அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

இதனுடைய முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக திமுக அரசு சோதனை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.