கடலில் காற்றாலை நிறுவி அதன் மூலம் மின்சாரம் கிடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் கடலில் காற்றாலை நிறுவுவதன் மூலம் மின்வெட்டுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் அனல் மின்சார உற்பத்தி நிலக்கரி பற்றாக்குறை காரணமாக குறைந்து வரும் நிலையில் காற்றாலை மின்சாரத்தை நிறுவுவது தமிழக அரசின் புதிய திட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றாலை மின்சாரம்
பெரும்பாலோனோர் கடற்கரைக்குச் செல்வது அங்கு வீசும் சுகமான காற்றை அனுபவிக்க தான் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த காற்றை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று என்று கூறினால் யாராவது நம்புவார்களா? ஆம், கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று ஏற்கனவே உலகில் உள்ள பல நாடுகள் நிரூபித்துள்ளன.
நிலக்கரி தட்டுப்பாடு
நிலக்கரி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் மின்சாரத்தை மட்டும் நம்பி ஒரு நாடு மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்பட பல்வேறு மாற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில உள்ளன.
கடலில் காற்றாலைகள்
எனவேதான் கடலில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒரு சில நாடுகள் தொடங்கி உள்ள நிலையில் தற்போது இந்தியாவும் அதில் கவனம் செலுத்தி வருகிறது. உலக அளவில் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
காற்றாலை மின்சாரம்
உலகிலுள்ள காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் 72% தரையிலுள்ள காற்றாலை மூலமும் 21% கடலில் உள்ள காற்றாலை மூலமும் கிடைத்து வருகிறது. கடலில் காற்றாலை அமைப்பதில் சீனா முன்னோடியாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவும் இந்த திட்டத்தில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவை பின்பற்றும் இந்தியா
சீனாவை போலவே இந்தியாவிலும் அதிக அளவு கடற்பகுதி இருப்பதால் இந்தியாவிலும் காற்றாலை மின்சாரம் பெருமளவு தயாரிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அனல் மின் நிலையங்களை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருக்கும் இந்தியா மாற்று திட்டமான காற்றாலையை நிறுவுவதற்கு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இந்திய எரிசக்தி துறை அமைச்சகம்
இந்திய எரிசக்தி துறை அமைச்சகம் 2030ஆம் ஆண்டுக்குள் 140 கிகா வாட் திறன் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உலக வங்கியும் இது குறித்து ஆய்வு செய்து இந்தியாவில் உள்ள கடல் பரப்பில் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு 174 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது.
தமிழ்நாடு – குஜராத்
குறிப்பாக தமிழ்நாடு குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கடற்பரப்பு இருப்பதால் அங்கு காற்றாலைகளை நிறுவி மின்சாரத்தை தயாரிக்க முடியும் என கண்டறியப்பட்டது. இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கு
இந்த அறிக்கையின் அடிப்படையில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க விரைவில் மத்திய அரசு டெண்டர் கோர உள்ளதாகவும் 2022 – 2023ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் முதல்கட்டமாக 4 கிகாவாட் மின்சாரம் தயார் செய்து 2030ஆம் ஆண்டுக்குள் 5 கிகாவாட் மின்சாரம் தயார் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெண்டர்
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான டெண்டர் கோரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தனுஷ்கோடியில் 350 கோடி ரூபாய் திட்டத்தில் காற்றாலை ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நிலங்கள் ஒதுக்கீடு பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மின்வெட்டு
இந்த திட்டம் உரிய காலத்திற்குள் செயல்படுத்தப்பட்டால் அடுத்து வரும் காலங்களில் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Wind mills in sea.. Tamil Nadu will get no powercut state soon
Wind mills in sea.. Tamil Nadu will get no powercut state soon| கடலில் இருந்து மின்சாரம்: இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காதா?